குப்பை மேட்டில் பீர் பாட்டில்களுடன் கிடந்த பணம் : சட்டவிரோத மது விற்பனை? வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
27 January 2022, 7:56 pm
Beer With Money - Updatenews360
Quick Share

கோவை: கோவை புறநகர பகுதியில் குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே உள்ள குப்பைமேட்டில் மதுபான பாட்டில்களுடன், அட்டைப் பெட்டி ஒன்றில் ரூபாய் நோட்டுகள் கேட்பாரற்று கிடந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டின் 73 குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டாலும் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூலூர் கலங்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகில் உள்ள குப்பை மேட்டில் வைத்து சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களுடன் அட்டைப்பெட்டியில் ரூபாய் நோட்டுகளையும் மது பாட்டில்களை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

குப்பை மேட்டில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் கேட்பாரற்று கிடந்ததை அவ்வழியாகச் சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

Views: - 873

0

0