குடும்ப சண்டையால் 9 வயது மகளுடன் தெப்பக்குளத்தில் குதித்த தாய் : நெஞ்சை உறைய வைக்கும் பதற்றமான சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 2:01 pm
Mother and Daughter Suicide - Updatenews360
Quick Share

விருதுநகர் : குடும்ப பிரச்சனை காரணமாக 9 வயது மகளுடன் தாய் தெப்பக்குளத்தில் விழுந்து தற்கொலை செய்த சிசிடிவி காட்சிகளை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சார்ந்தவர் பழனிவேல் (வயது 29). இவரது மனைவி மகாலட்சுமி (வயது 29). இவர்களுக்கு கஜலட்சுமி என்ற ஒன்பது வயதில் மகள் உள்ள நிலையில் குடும்பத்தில் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் கோவிலுக்கு செல்வதில் கடந்த இரு தினங்களாக சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கணவன் பழனிவேல் மகாலட்சுமியை அடித்துள்ளார்.

இதில் மனவேதனையில் இருந்த மகாலட்சுமி தனது 9 வயது மகள் கஜலட்சுமி உடன் விருதுநகர் தெப்பக் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து இருவரின் சடலங்களும் மிதந்து வந்த நிலையில் மக்கள் கூட்டம் கூடியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மிதந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அருகே இருந்த கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ச்சி செய்தனர். இதில் நள்ளிரவு நேரத்தில் தாயும் மகளும் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மீது ஏறி உள்ளே குதித்து தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 702

0

0