என் உயிருக்கு ஆபத்து…என்னை மிரட்டுறாங்க : பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க உள்ளேன்… மதுரை ஆதீனம் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 6:50 pm
Madurai Adheenam - Updatenews360
Quick Share

தருமபுரம் பட்டின பிரவேசம் நடத்துவேன் என அறிவித்ததால் என்னை ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள் என மதுரை ஆதீனம் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு பாஜக, பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம், கலிமேட்டில் உயர் மின் அழுத்த மின்கம்பி உரசி விபத்தில் தீக்கிரையான அப்பர் பல்லக்கை மதுரை ஆதினம் பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததால் என்னை ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. அச்சுறுத்தல் தொடர்ந்தால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 780

0

0