ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த நயன்தாரா… அள்ளிக்கொடுத்த அன்னபூரணி!

Author: Rajesh
4 December 2023, 6:08 pm
nayanthara
Quick Share

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா தற்ப்போது ” அன்னபூரணி ” என்ற படத்தில் நடித்துள்ளார். ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ள படம், ‘அன்னபூரணி’.

இப்படத்தில் நயன்தாரா தனது கனவு லட்சியமான “செஃப் ” ஆசையை பல தடைகளை தகர்த்தெறிந்து ஜெயித்து காட்டுகிறார். இதில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா தன் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். அவருடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார். நயன்தாரா ஜவான் படத்திலிருந்து தொடர்ந்து ப்ரோமோஷன்களில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 193

0

0