பட்டா மாறுதலா ரூ.5 ஆயிரம் கொடுங்க : லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்த இளைஞர்… கையும் களவுமாக சிக்கிய எழுத்தர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 4:00 pm
Bribery Clerk Arrest -Updatenews360
Quick Share

விழுப்புரம் : திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 30). இவரது தாயார் கலைமணி என்பவருக்கு 2007ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

இதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்கு மற்றும் வட்ட கணக்கில் திருத்தம் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் 2007 ரெக்கார்டில் திருத்தம் செய்ய அந்த ஆண்டிற்கான கணக்கை எடுத்துக் கொடுப்பதற்கு வட்டாட்சியர் அலுவலக பதிவறை எழுத்தர் சிவஞானவேலு (வயது 48), என்பவர் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் யுவராஜியிடம் ரசாயனம் தடவிய 5000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பதிவறை எழுத்தர் சிவஞான வேலுவிடம் கொடுக்க அறிவுறுத்தினர்.

அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் 5000 ரூபாயை யுவராஜ் சிவஞானவேலுவிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவஞான வேலுவை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் இது சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றத்திற்கு 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 473

0

0