மது குடிக்க வாகனங்களை திருடி விற்கும் குடிமகன்… இறுதியில் போலீஸ் வசம் சிக்கிய கொள்ளையன்..!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 10:28 pm
Quick Share

மது குடிப்பதற்காக புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் விலையுர்ந்த இருசக்கர வாகனங்களை திருடியவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி திருபுவனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவு இருசக்கர வாகனங்கள் திருடுபோனதால், திருபுவனை காவல்நிலையம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர்.

நேற்று இரவு புதுச்சேரி – தமிழக எல்லையான மதகடிப்பட்டு பகுதியில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும் படியாக அவ்வழியே வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் சிசிடிவி கேமிராவில் பதிவான தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் விழுப்புரம் பகுதியை சார்ந்த வெங்கடேசன் என்பதும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், வெங்கடேசன் தற்போது வேலை இல்லாமல் இருப்பதும், மது குடிப்பதற்காக திருபுவனை, வில்லியனூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலிசார், அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 897

0

0