காதல் என்ற போர்வையில் பாலியல் தொந்தரவு : பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது

Author: kavin kumar
17 February 2022, 8:36 pm
Quick Share

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியிடம், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் விஷ்வா (22) என்ற இளைஞர் காதலிப்பதாகக்கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் அந்த இளைஞரை பலமுறை எச்சரித்துள்ளனர். இதனை ஏற்காத அந்த இளைஞர் சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் விஷ்வாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 716

0

0