வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்திய பூர்ணா.. புகைப்படங்கள் இதோ.!

Author: Rajesh
1 June 2022, 1:39 pm
Quick Share

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா எனும் சாம்னா கசிம். அந்தப் பட இசை வெளியீட்டு விழாவின் போது பார்க்க அசின் போலவே இருக்கிறார் என நடிகர் விஜய்யால் பாராட்டப்பட்டவர். அதன் பின் நிறைய மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். பல டிவி ஷோக்களில் நடுவராகப் பங்கேற்றிருக்கிறார்.

பூர்ணா தனது வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துஇ ‘குடும்பத்தினரது ஆசீயுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அதிகாரப்பூர்வமாக,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பூர்ணா திருமணம் செய்ய இருக்கும் நபர் பெயர் சானித் ஆசிப் அலி. துபாயில் தொழிலதிபராக உள்ளார். தற்போது இருவீட்டாரது சம்மதத்துடன் நிச்சயம் நடந்துள்ளது. இந்த நிலையில் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 662

5

2