மீண்டும் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2022, 5:51 pm
CM Letter To Modi- Updatenews360
Quick Share

இலங்கைக் கடற்படையால் 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள்,இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில்,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படும் தாக்கப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் மேலும் ஒரு நிகழ்வாக இன்று 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Image
Image
Views: - 607

0

0