தோல்வியை கண்டாலே நடுங்குவாரா ரஜினி…? சூப்பர் ஸ்டார் சுயரூபம் இதுதான்!

Author: Shree
2 December 2023, 3:13 pm
rajini ilayaraja
Quick Share

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72 வயதாகியும் இன்னும் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை எந்த ஒரு ஹீரோக்களாலும் முறியடிக்கவே முடியாது. ரஜினி படத்தில் ஒரு சின்ன ரோலாவது கிடைத்துவிடாதா? என எத்தனையோ திறமைவாய்ந்த நடிகர், நடிகைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ரஜினி தன் படங்களில் பணியாற்றும் கலைஞர்கள், டெக்னீஷியன்ஸ், இயக்குனர், தயாரிப்பாளர் என யாராக இருந்தாலும் ஹிட் பிரபலத்தை தேடி பிடித்து தான் ஓகே செய்வாராம். எந்த ஒரு காரணத்தாலும் படம் தோல்வி அடையக்கூடாது என்ற எண்ணத்தில் ரஜினி அப்படி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

புதுமுக இயக்குனர் சூப்பர் ஹிட் படமொன்றை இயக்கிவிட்டால் அடுத்தது அந்த நபரை வீட்டிற்கு வரவைத்து நம்ம ஒரு படம் பண்ணலாம் என புக் செய்வாராம். அப்படித்தான் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினியின் மாஸ்தான இசையமைப்பாளராக இருந்து வந்தவர் இளையராஜா. அவர்கள் இருவரும் தொழிலை தாண்டி ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையும் வைத்திருந்தார்களாம்.

இப்படி சென்றுக்கொண்டிருந்த சமயத்தில் ரஜினி திடீரென இளையராஜாவை கழட்டிவிட்டு அண்ணாமலை படத்தில் தேவாவை வைத்து படம் எடுத்தார்கள். அதன் பின்னர் ஏ. ஆர் ரஹ்மான், பின்னர் பீக்கில் இருந்துவந்த அனிருத்தை தேர்வு செய்தார். எனவே ரஜினி சமயத்திற்கு ஏற்றார் போல் சுயநலவாதியாக மாற்றிவிடுவார் என பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.

Views: - 195

0

0