இனி எப்படி இருந்தாலும் பொருட்கள் வாங்கலாம் : மாடர்னாக மாறும் ரேஷன் கடைகள்… ஆய்வு செய்த பின் ராதாகிருஷ்ணன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2022, 7:32 pm
Radhakrishnan - Updatenews360
Quick Share

நியாவிலை கடையில் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் பல்வேறு இடங்களில் கூட்டுறவு துறைதுறை உணவு வழங்கல் துறை சார்பாக ஆய்வு மேற்கொள்ள உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை புரிந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் பீளமேடு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து அங்குள்ள பயோமெட்ரிக் கருவி போன்றவைகளை பரிசோதனை செய்தார்.

மேலும் பொதுமக்களிடம் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் அங்குள்ள வசதிகள் போதுமானதாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் சில குறைகளை தெரிவித்தனர். முக்கியமாக பயோமெட்ரிக் கருவி அடிக்கடி வேலை செய்வதில்லை என்றும் இதனால் வயதானவர்கள் உட்பட பலருக்கும் பொருள்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என தெரிவித்தனர். அவர்களிடம் இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் முதியவர்களுக்கு பயோமெட்ரிக் கருவி சில நேரங்களில் வேலை செய்யவில்லையென்றால் குறிபேடு எதிலாவது கையெழுத்து வாங்கிவிட்டு பொருட்களை தருமாறு ஊழியர்களிடம் கூறினார்.

பின்னர் பொதுமக்கள் அவருக்கு பொன்னாடை அணிவிக்க வந்த போது பொன்னாடையை வாங்கி முதியவருக்கு அணிவித்தார். இந்த ஆய்வின் பொழுது வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இரவு நேரத்தில் கேரள எல்லை சோதனைச் சாவடிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 34,777 நியாயவிலைக் கடைகள் உள்ளதாகவும் கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாகவும், தெரிவித்த அவர் இங்கு ஆய்வு மேற்கொண்டதில் பொதுமக்கள் பலரும் முதியவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் சில கருவிகளில் பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள பணியாளர்களும் அதை தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் பல நேரங்களில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப் படுவதாகவும் என்று தரமான பொருட்கள் வினியோகம் செய்யப் பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்.

எனவே நியாயவிலைக் கடைகளில் விற்பனை ஆகாத பழைய அரிசி போன்றவற்றை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் குடோனுக்கு அனுப்புமாறு பணியாளர்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு இடங்களில் மாதிரி கடைகள் உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நியாயவிலைக் கடைகளில் வாங்காத அட்டையாளர்களை கண்டறிந்து அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது உள்ள கடைகளை தரம் உயர்த்தி மார்டன் கடைகளாக மாற்றுவதற்கு முதல்வர் ஒப்புதலுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் அமுதம் காமதேனு கடைகளை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார். தற்பொழுது விவசாயத்தை பொருத்தவரை இந்த ஆண்டு செப்டம்பர் முதலிலேயே கொள்முதல் செய்வதற்கு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும், அதேசமயம் நாங்களும் தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் நமது மாநிலத்தில் வழங்கப்படக் கூடிய அரிசி வேறு மாநிலத்திற்கு சென்று பாலிஷ் செய்து வேறு மாநிலங்களில் விற்பனை செய்வதை தடுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். இதுகுறித்து 2853 புகார்கள் வந்துள்ளதாகவும் 901 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், இதற்காக தமிழகத்தில் 41 எல்லை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்தத் துறை தரமான பொருட்கள் மட்டுமல்லாமல் அதன் விலைகளையும் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு எம்டிசிசி வங்கி மூலமாகவும் மிகப்பெரிய உதவிகள் வழங்கப்பட்டு அதனை செய்து வருவதாக தெரிவித்தார்.

Views: - 474

0

0