திமுகவில் உழைக்காதவர்களுக்கு பதவி… எனக்கே 63 வயதில் தான் எம்பி பதவி கொடுத்தாங்க ; ஆர்எஸ் பாரதி ஆதங்கம்!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 6:02 pm
Quick Share

திமுகவில் உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்றும், உழைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது :- இங்கு இருக்கும் பாதி பேருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற வேதனை இருக்கும். உழைத்தும் பதவி கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் இருப்பது நியாயம் தான். காரணம் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை. உழைக்காதவர்கள் பதவிக்கு வந்திருப்பது வேதனையாகத்தான் இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர்.

கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள். திமுகவுக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் பதவி தேடி வரும். அதற்கு நான் உதாரணம். கட்சிக்கு நான் அழைத்து வந்தவர்கள் எம்எல்ஏ, அமைச்சர் ஆகிவிட்டனர். ஆனால் எனக்கு காலதாமதமாக வந்தது. காரணம் ஒரே கொடி, ஒரே கட்சி, ஒரே தலைவர் என இருந்ததாலும் 63 வயதில் எம்பி பதவி கிடைத்தது.

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் அவ்வளவு எளிதாக பதவி கிடைக்காது. இதையெல்லாம் ஜீரணித்து கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். பொறுமையாக இருந்தால் என்றைக்காவது பதவி வந்துவிடும் என கட்சிக்குள் வந்துள்ள இளைஞர்களுக்கு தான் இதை சொல்லுகிறேன், என தெரிவித்தார்.

Views: - 377

0

0