மனைவிக்கு 3 அடுக்கு பங்களாவீடு… உல்லாசத்துக்கு சொகுசு காரு : காத்து வாக்குல கள்ளக்காதலியுடன் சலூன் கடைக்காரர் செய்த மோசடி.. பகீர் பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2022, 1:27 pm
Fraud Barber Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : போலி நகைகளை அடகு வைத்து மனைவிக்கு 3-மாடி பங்களா வீடு
கள்ள காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா என வலம் வந்த முடி திருத்தும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சித்திரங்கோடு பகுதியில் நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று பெண் ஊழியர் ஒருவர் இருந்த நிலையில் அங்கு வந்த பெண் ஒருவர் தன்னை காவியா என்று அறிமுகப்படுத்தியதோடு 9-கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30-ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணத்தை பெற்று சென்றுள்ளார்.

மாலை கடைக்கு வந்த சுரேஷ் அடகு பிடித்த நகைகளை சரிபார்த்த போது 1-வளையல் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அதை சோதித்த போது அது போலி வளையல் என்பதும் காவியா என்ற பெண் போலி நகையை ஏமாற்றி அடகு வைத்து சென்றதும் தெரிய வந்தது.

உடனே சுரேஷ் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது செகுசு காரில் ஒரு ஆணுடன் வந்து இறங்கிய இளம் பெண் அந்த போலி வளையலை அடகு வைத்து செல்வது பதிவாகி இருந்தது. இதனையடுத்து சுரேஷ் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்

இந்த நிலையில் கொற்றிகோடு போலீசார் இன்று காலை வேர்கிளம்பி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை மடக்கி காரை ஓட்டி வந்த அந்த நபரை விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான ஜேசுராஜா என்பதும், செட்டிக்குளம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவவ்கள் வெளியானது. செட்டிகுளம் பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் ஜேசுராஜாவுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் வீடு கார் என சொகுசாக வாழ விரும்பிய ஜேசுராஜாவுக்கு சலூன் கடை வருமானம் கைகொடுக்காத நிலையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரன் ஆக கடந்த இரண்டு வருடத்திற்கு முன் திட்டமிட்டு வந்ததாகவும், அப்போது கணவனை இழந்து 2-குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்த செட்டிகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண் அனுஷா என்பவருடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி கொண்ட ஜேசுராஜா அவருடன் திட்டமிட்டு கேரளாவில் இருந்த கவரிங் வளையல்களை வாங்கி வந்து சிறிய நகை அடகு பிடிக்கும் கடைகளை குறி வைத்து அவசர தேவைக்கு அடகு வைப்பது போல் கள்ள காதலி அனுஷாவை அனுப்பி நாடகமாடி அடகு வைத்து மோசடி செய்து லச்ச கணக்கான ரூபாய்க்கு போலி நகைகளை அடகு வைத்ததும் அதில் கிடைத்த பணத்தில் மனைவிக்கு 3-மாடியில் பங்களா வீடும் கட்டி கொடுத்ததோடு, கள்ள காதலியுடன் சொகுசு காரில் பல்வேறு பகுதிகளுக்கு இன்ப சுற்றுலா சென்று அறை எடுத்து தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தற்போது மீண்டும் போலி நகைகளுடன் கடந்த மூன்று நாட்களில் 7-நகை அடகு வைக்கும் கடைகளில் போலி வளையல்களை பல லட்ச ரூபாய்க்கு அடகு வைத்ததும் தற்போது வேர்கிளம்பி பகுதியில் உள்ள நகை அடகு கடைக்கு வளையல்களை அடகு வைக்க வந்த போது சிக்கி கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் ஜேசுராஜாவை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கள்ள காதலி அனுஷா வை தேடி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவர்கள் ஜோடியாக சென்று போலி நகைகள் அடகு வைத்துள்ளதாக சிசிடிவி ஆதாரங்களுடன் புகார்கள் இருப்பதாக தெரிவிக்கும் போலீசார் ஜேசுராஜாவை போலீஸ் காவலில் எடுத்து கள்ள காதலி அனுஷா வையும் பிடித்து மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Views: - 1204

0

0