செந்தில் முன்பு அவரது வசனத்தை பேசி அசத்திய அவரது பேத்தி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
30 May 2022, 5:00 pm
Quick Share

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் நகைச்சுவைக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்தால் ரசிகர்கள் சிரித்து சிரித்து டயர்டாவது நிச்சயம். முக்கியமான கவுண்டமணி அண்ணனாகவும் செந்தில் தம்பியாகவும் நடித்த பல காமெடிகள் ரசிகர்களின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளன. மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்க மாட்டார்களா என்ற ஏக்கமும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளன.

இதற்கிடையே நடிப்பு மட்டுமல்லாமல், அரசியலிலும் நுழைந்தார் செந்தில். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த அவர், ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அக்கட்சியின் அமைப்பு செயலாளராக அவரை டிடிவி தினகரன் நியமித்தார். பின்னர் அமமுக-விலிருந்து நீக்கப்பட்டு, சில காலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார். பின்னர் கடந்தாண்டு பாஜக-வில் இணைந்தார்.

செந்திலுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செந்திலின் பேத்தி மிருதி, தனது தாத்தா முன்பு அவருடைய காமெடி வசனத்தை பேசி நடித்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 682

2

1