தூங்கிட்டு இருந்தா கூட எழுப்பி அத பண்ண சொல்றாரு – வேதனையை பகிர்ந்த மகாலக்ஷ்மி!

Author: Rajesh
5 December 2023, 8:56 pm
mahalakshmi
Quick Share

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியலில் கலக்கி வருபவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ளும் வைக்கும் வகையில் இருந்தாலும், இவரது நடிப்பு திறமையை பலரும் பாராட்டி தான் வருகிறார்கள்.

ravindar mahalakshmi-updatenews360

அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்துவரும் இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது அனைவரும் அறிந்த விஷயமே. இதையடுத்து கடந்த ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

vj mahalakshmi - updatenews360

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி உருவக்கேலிக்கு ஆளாகி பல எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.

இந்நிலையில் மகாலக்ஷ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது ரவீந்தரின் உடல் எடையை குறைக்க நாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தோம். ஆனால் அவர் டயட்டை சரியாக கடைபிடிக்கவே மாட்டார். அவருடன் இருந்தால் என்னையும் ஒழுங்காக டயட் fallow பண்ண விடமாட்டார். நடுராத்திரியில் என்னை எழுப்பி சாப்பிட வைக்கிறார். நான் பெரும்பாலும் அதிகமாக சாப்பிடமாட்டேன். ஆனால், இறங்கிவிட்டால் வயிறுமுட்ட சாப்பிட்டுவிடுவேன். எனவே அவரும் சரியாக உடலை மெயின்டைன் செய்வது கிடையாது. என்னையும் அப்படி செய்ய விடுவதில்லை என கூறி புலம்பினார் மகாலக்ஷ்மி.

Views: - 277

0

0