பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் : சிக்கிய கணக்கு வாத்தியார்…. மாவட்ட முதன்மை கல்வி எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 7:14 pm
School Teacher Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேகாம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் (வயது 59) கணித ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் போலீசார் பள்ளியில் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஆசிரியர் செந்தாமரை கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உத்தரவிட்டார்.

Views: - 959

0

0