தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : குடும்பத்துடன் தங்கிய மருத்துவர், மகன், மகள் பரிதாப பலி… இரண்டு பெண்கள் உயிருடன் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 11:28 am
Hospital Fire Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : தீ விபத்தில் சிக்கிய டாக்டர் ரவிசங்கர் ரெட்டி 50 சதவிகித தீக்காயத்துடன் பலி.

ரேனிகுண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அங்கு புற நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் டாக்டர் ரவிசங்கர் ரெட்டி குடும்பத்துடன் தங்கி இருந்தார். தீ விபத்தில் டாக்டர் தம்பதியினர் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் ஆகியோரும் சிக்கி கொண்டனர்.

ரவிசங்கர் ரெட்டி – அனந்தலட்சுமி தம்பதியின் மகள் கார்த்திகா, மகன் பரத் ரெட்டி ஆகியோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்த நிலையில் டாக்டர் அனந்தலட்சுமி உட்பட இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் 50 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்ட டாக்டர் ரவிசங்கர் ரெட்டி மரணம் அடைந்தார். ஒரே சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் மகள் ஆகியோர் மரணம் அடைந்தது குடும்ப உறுப்பினர்கள் நட்பு வட்டாரங்கள் ஆகியவற்றில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 331

0

0