சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் திடீர் தீ விபத்து.. அலறியடித்து ஒடிய ஊழியர்கள் : ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்புத்துறை.. பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 1:23 pm
Pondy Secretariat Fire -Updatenews360
Quick Share

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்புடன் காணப்பட்டது.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறை உள்ளது. இந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது இதனையடுத்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்றம் முழுவதுமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் புகைவந்த இடத்திற்கு சென்றபோது அங்கு திமுக எம்.எல்.ஏ கென்னடி அறையின் குளிர்சாதன பெட்டி தீப்பற்றி எரிந்தது.

இதனையடுத்து தீ பரவாமல் உடனடியாக தீயை அணைத்தனர், முதற் கட்ட விசாரணையில் பழுதடைந்த குளிர்சாதன பெட்டியால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது என தீயனைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்,

மேலும் இந்த குளிர்சாதன பெட்டியை மாற்ற கோரி பல முறை சட்டபேரவை செயலரிடம் கூறியும் இன்னும் மாற்றப்படாமல் இருப்பதே இந்த விபத்துக்கு காரணம் என திமுக சட்டமன்ற உறுப்பினர் கென்னடி குற்றம் சாட்டியுள்ளார். இந்த தீடிர் தீ விபத்து காரணமாக சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Views: - 919

0

0