திரைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் நிறைவு செய்த சமந்தா- உருக்கமான பதிவு..!

Author: Rajesh
26 February 2022, 10:53 am
Quick Share

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார். இந்த நிலையில்,  அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் திரைப்படத் துறையில் 12 வருடங்களை நிறைவு செய்தாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் மற்றும் அருமையான தருணங்களைச் சுற்றி 12 வருட நினைவுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்பயணம் என்றும் எனது ரசிகர்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். சினிமாவுடனான எனது காதல் கதை ஒருபோதும் முடிவடையாது என்றும் அது என்னை பலமாக என்றும் வைத்திருக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Views: - 709

0

0