மரங்கள் மீது போடப்பட்ட தார்சாலை : பழிவாங்க பச்சைமரம் என்ன பாவம் செய்தது? அதிகாரிகள் மீது சமூக நல ஆர்வலர்கள் அதிருப்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 10:20 pm
Tree - Updatenews360
Quick Share

கரூர் : பச்சைமரங்களின் மீது அரசியல் சாயம் பூசி மரங்களை பட்டு போக வைக்கும் தார்சாலை பணிகளால் சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அளவில் அதிகம் வெயில் பதிவாகும் மாவட்டங்களில் கரூர் என்றாலே அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், அன்றைய அதிமுக ஆட்சியில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அப்போதைய தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களால், எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பில் கானகத்திற்குள் கரூர் என்கின்ற திட்டத்தினை உருவாக்கி அன்று முதல் இன்று வரை நடப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களுக்கு டிராக்டர் மற்றும் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி வரப்படுகிறது.

இந்தநிலையில், கரூரின் பிரதான சாலையான கரூர் கோவை சாலை சீரமைக்கும் பணியானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. அதற்கான பணி கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் இருந்து துவங்கி கோவை சாலை வரை அந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே அந்த சாலைகள் நன்கு உள்ள நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக, ஒப்பந்ததாரர்கள் தார்சாலை போட துடிப்பதாகவும் கூறி நள்ளிரவோடு நள்ளிரவு தார்சாலைகளை பறித்து ரோடு போட்டுள்ளனர்.

தார்சாலைகளை பறிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து சாலை ஓரங்களில் நடப்பட்ட மரங்களின் மீதும் தார்கள் தெளிக்கப்பட்டும், எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பில் நடப்பட்ட மரங்களின் மீதும் தார்சாலைகள் போடப்பட்டு, அதனை அப்படியே விட்டு விட்டுள்ளனர்.

ஒரு சில புறங்களில் தார்சாலைகளை அமைத்து அதனை சமன்படுத்தாமல் விட்டு விடும் காட்சிகளும் கரூரில் காணப்படும் நிலையில், சாலை ஓரங்களில் நடப்பட்டு உள்ள மரங்களை சுற்றியும் தார் சாலை போடப்பட்டுள்ளது.

இங்குள்ள சமூக நல ஆர்வலர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மரங்களைச் சுற்றி வேர் பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு தாரைக் கொட்டி சமன் செய்துள்ளனர். இதனால் மரங்கள் வளர்வதற்கு தேவையான தண்ணீர் வேர்களுக்கு செல்ல வழி இல்லாமல் மரம் காய்ந்து போவதற்கு வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர்.

மேலும் ஒப்பந்ததாரர் சாலை அமைக்கும் போது மரத்தைச் சுற்றியுள்ள தார் சாலையை அகற்றி தண்ணீர் ஊற்றுவதற்கு ஏதுவாக செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுமட்டுமில்லாமல், பல மரங்களின் கிளைகளை இரவோடு இரவாக வெட்டி அப்பகுதியில் போடப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்திய அளவில் போடாத ரோட்டிற்கு ரூ 3 கோடி பில் பாஸ் செய்த ஆட்சி என்ற ஆதாரப்பூர்வ குற்றச்சாட்டினை தமிழக அளவில் மட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஆதாரத்தினை திரட்டி, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரை அரசு சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், அவர்கள் ஒன்றிணைந்து, ஒப்பந்ததாரர்களோடு இணைந்து முன்னாள் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பழிவாங்கும் நோக்கிலும், அவர் வைத்து இன்று வரை பராமரித்துவரும் பச்சை மரங்களை அழிக்கும் நோக்கில் செயல்படும் இந்த செயலுக்கு பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 530

0

0