குடிக்கற சாராயத்துக்கு லஞ்சமா… கேட்ட பிராண்டை தராமல் கூடுதலாக 5 ரூபாய் கேட்ட டாஸ்மாக் பணியாளர் : கொந்தளித்த குடிமகன்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 2:00 pm
Liquor Rate - Updatenews360
Quick Share

திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூபாய் 5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக விற்க்கப்படுகிறது.

குடிமகன்கள் கடை விற்பனையாளர்கள் சொல்லும் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். ஆனால் ஒரு சில குடிமகன்கள் அதிகமாக கேட்பது ஏன் என கேட்டு வாய்தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்ட மதுபானத்தை கேட்கும்போது அவர் தர மறுக்கிறார்.

வாடிக்கையாளர் குறிப்பிட்ட மதுபானத்தை காட்டி அங்கு இருக்கிறது ஏன் தர மறுக்கிறீர்கள் எனக் கேட்பது மட்டுமில்லாமல் ஏன் 5 ரூபாய் கூடுதலாக கேட்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விற்பனையாளர் தர மறுத்த நிலையில் அதே கடையில் பணிபுரியும் மற்றொரு விற்பனையாளர் சலித்துக் கொண்டு அவர் கேட்ட குறிப்பிட்ட மதுபானத்தை எடுத்துத் தரும் வீடியோவும் அதில் பதிவாகியுள்ளது.

இதுபற்றி டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து கடைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை தவிர அதிகமாக வழங்கினால் விற்பனையாளர் மற்றும் சூப்பர்வைசர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 409

0

0