சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி: இந்தியாவின் ‘தேஜஸ்’ போர் விமானம் பங்கேற்பு..!!

Author: Rajesh
13 February 2022, 10:45 am
Quick Share

புதுடெல்லி: சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் விமான கண்காட்சியில் இந்தியாவின் ‘தேஜஸ்’ போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நாளை மறுநாள் முதல் 18ம் தேதி வரை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற உள்ளது. தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த, உலக நாடுகளுக்கு இது ஒரு சிறந்த தளமாக இந்த கண்காட்சி பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த கண்காட்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று தேஜஸ் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பார்வையாளர்களிடம் இதன் திறனை காட்டுவற்காக இந்த போர் விமானங்கள் வானில் சாகசம் புரிய உள்ளன.

இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த 44 வீரர்கள் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தனர்.

Views: - 955

0

0