விஜய் கூட நீ நடுச்சாலே Flop தான்… தளபதி 66ம் சோலி முடுஞ்சுது… ரசிகரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்..!!

Author: Babu Lakshmanan
6 May 2022, 6:01 pm
Quick Share

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கு வரும் இந்தப் படமானது, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

படத்திற்கு தலைப்பு ஏதும் வைக்கப்படாத நிலையில், தற்காலிகமாக ‘தளபதி 66’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதேவேளையில், விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷாம் மற்றும் சரத்குமாரும் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க குடும்ப பின்னணி படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளார்.

விஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் யோகி பாபு நடித்திருந்த நிலையில், தற்போது 5வது முறையாக மீண்டும் விஜய்யுடன் நடிக்கிறார்.

Beast: 5 reasons why you should watch Thalapathy Vijay, Pooja Hegde's film

தளபதி 66 படத்தில் இணைந்ததை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்தார் நடிகர் யோகி பாபு. இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், நெட்டிசன் ஒருவர் ‘நீ விஜய் கூட நடித்த மூன்று திரைப்படங்களும் பிளாப் தான், சர்கார் A.R.முருகதாஸ் அவுட், பிகில் அட்லீ அவுட், பீஸ்ட் நெல்சன் அவுட். அடுத்தும் தொடர்கிறது’ என்று பதிவிட்டு இருந்தார்.

அதற்கு யோகி பாபு “Thankyou Pa” என பதிலளித்துள்ளார். அவரது இந்தப் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றன்.

Views: - 663

0

0