என் காரையே நிறுத்தி சோதனை செய்றயா? நடுரோட்டில் போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய ஓட்டுநர்.. பரபரப்பு காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 2:07 pm
Andhra Police Attacked by driver- Updatenews360
Quick Share

ஆந்திரா : வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ஸ்ரீநிவாஸ். அதே பகுதியில் போக்குவரத்து காவலராக ஆக பணிபுரிபவர் குமார்.

இந்நிலையில் இன்று அதிவேகமாக காரை ஓட்டிச்சென்ற ஸ்ரீநிவாஸ் இடம் காரை நிறுத்த சொல்லி குமார் எச்சரிக்கை விடுத்த நிலையில் சற்று தொலைவு சென்று காரை நிறுத்தியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.

இதனால் ஸ்ரீநிவாஸ் மது அருந்தி இருக்கலாம் என சந்தேகமடைந்த குமார் அவரிடம் சோதனை மேற்கொண்டார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவரைத் தாக்கத் தொடங்கினார். இதில் போக்குவரத்து காவலர் குமார் காயமடைந்தார்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஸ்ரீநிவாசை பிடித்த குமார் காவல் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கார் ஓட்டுனர் போக்குவரத்து காவலரே தாக்கும் காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

Views: - 722

0

0