பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் மீது ஏறி இறங்கிய மினி பஸ் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 6:16 pm
Bus Clash Old Man - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பேருந்து நிலையத்தில் விழுந்த முதியவர் மீது மினி பஸ் ஏறி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலையத்தில் இன்று காலை முதியவர் ஒருவர் நடந்து சென்ற போது மயங்கி விழுந்த நிலையில் அவரது அருகில் நின்ற மினி பஸ் ஒன்று அவர் உடல் மீது ஏறி இறங்கியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஏனோதானோ என்று நிற்கும் மினி பஸ்களை முறை படுத்தி பேருந்து நிலையத்தில் மினி பஸ்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மினி பஸ்கள் நிறுத்த வேண்டும்.

அனுமதி இன்றி பேருந்து நிலையத்தில் வரும் மினி பஸ்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Views: - 1197

0

0