பைக் மோதி சாலையை கடக்க முயன்ற முதியவர் தூக்கி வீசப்பட்ட காட்சி : பதை பதைக்க வைக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 2:03 pm
Palladam CCTV - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 65 வயது முதியவர் பலியான சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுடள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிவேலம்பட்டியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 65). இவர் காளிவேலம்பட்டி பிரிவில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் கம்பெனியில் வாட்ச்மேனாக பணி புரிந்து வருகிறார்.

இன்று காலை பணி முடிந்து நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த அவர் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மருதமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்த ஹாரீஸ் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 993

0

0