போத்திப் படுத்ததே Phone எடுக்கதான் : தூங்கிக் கொண்டிருந்த போதை ஆசாமியிடம் போர்வை போர்த்தி திருடிய முதியவர்…!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 5:36 pm
Cell Phone Theft -Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் படுத்துறங்கியவரிடம் போர்வையை போர்த்தியவாறு பக்கத்தில் படுத்திருந்த நபர் செல்போனை திருடி செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் உள்ளது.தற்போது செயல் படாத காரணத்தால் முன் பகுதியில் பொதுமக்கள் காத்திருபத்து வழக்கம்.அவ்வாறு நேற்று மாலை அப்பகுதிக்கு வந்த குடிமகன் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் அங்கு படுத்து விட்டார்.

இதனை பார்த்த அருகில் இருந்த நபர் ஒருவர் அவர் அருகில் போர்வையை போர்த்தி கொண்டு படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவருடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.

பின்பு எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து எழுந்து செல்கிறார். இக்காட்சிகளை அங்கு காரில் அமர்ந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Views: - 1048

0

0