அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் தமிழகத்தில் கிடையாது.. தகுதியே இல்லாத ஒருவர் சபாநாயகராக உள்ளார் : அண்ணாமலை விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 1:37 pm
Appavu - Updatenews360
Quick Share

அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் தமிழகத்தில் கிடையாது.. தகுதியே இல்லாத ஒருவர் சபாநாயகராக உள்ளார் : அண்ணாமலை விமர்சனம்!!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் பாரதிய ஜனதா மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வரலாறு படைத்துள்ளது. மோடியின் அபிமானத்தோடு ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தேர்தல் நடந்த மாநிலங்களில் முதலமைச்சரை முன்னிலை படுத்தாமல் கட்சி முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக தெலங்கானா முடிவு உள்ளது. அங்கித் திவாரி விவகாரத்தை பொருத்த வரை பஞ்ரமா டாக்குமெண்டில் நான்கு பேர் தான் கையெழுத்து போட்டுள்ளனர். 35 பேர் கைது போடவில்லை. இது குறித்து டிஜிபி விளக்கமாக தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டும்.

சனாதன தர்மம் வட மாநில தேர்தல் வெற்றியில் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது என மக்கள் பார்க்கிறார்கள். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பாரதிய ஜனதா கட்சி அடையும். பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை யாரெல்லாம் மோடியை ஏற்று அவரது கரத்தை வலுப்படுத்த நினைக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்.

தமிழக சபாநாயகர் அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் தமிழகத்தில் கிடையாது. தகுதியே இல்லாத ஒருவர் சபாநாயகராக உள்ளார் என்றால் அது அப்பாவும் மட்டும்தான். அவர் பேசாமல் திமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு சபாநாயகர் இருக்கையில் அமரலாம். தெலுங்கானா டிஜிபி அஞ்சனகுமார் தேர்தல் கமிஷனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வரவேற்க கூடியது என்று தெரிவித்துள்ளார்.

Views: - 189

0

0