படிக்கட்டில் பயணம் செய்ததால் தகராறு… பேருந்தில் பயணியுடன் மல்லுக்கட்டிய நடத்துநர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
28 May 2022, 12:43 pm
Quick Share

திருவள்ளூர் : தச்சூரில் அரசு பேருந்தில் பயணியை நடத்துனர் அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அரி என்பவர் தனியார் நிறுவன ஊழியராவார். இவர், கடந்த 6ம் தேதி கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் பகுதியில் செங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, படிக்கட்டில் நிற்க கூடாது என பேருந்து நடத்துனர் தேவன் தெரிவித்த போது, அவரை அவதூறாக பேசி தாக்கியதாகவும், நடத்துனரும் அவரை உதைத்து தாக்கியுள்ளார். இது குறித்து இருவரும் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி வழக்கை முடித்து போலீசார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நடத்துனர் தேவன், அரியை தாக்கும் வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 575

0

0