மயங்கி விழுந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் : அரசு நிகழ்ச்சியில் மக்கள் நேர்காணலில் ஈடுபட்ட போது பரபரப்பு…!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 5:31 pm
collector Dizzy - Updatenews360
Quick Share

திருவாரூர் : அரசு நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசின் ஆட்சியர் பங்கு பெறும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 248 பயனாளிகளுக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும்போதே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார்.

அருகாமையில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு நாற்காலியில் அமர வைத்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நிகழ்ச்சியின் பாதியிலேயே தனது முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது. அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மயங்கி விழுந்தது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 496

0

0