காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வீடுபுகுந்து கொடூரமாக வெட்டிக்கொலை : சொந்த ஊர் திரும்பிய 4 நாட்களில் வெறிச்செயல்..!!

Author: Babu Lakshmanan
25 July 2022, 7:32 pm
Quick Share

தூத்துக்குடி : எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (28). அதே ஊரைச் சேர்ந்த தனது தாய்மாமா முத்துக்குட்டி என்பவர் மகள் ரேஷ்மாவை (20) இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ரேஷ்மா வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வெளியூரில் தங்கி இருந்த இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் மாணிக்கராஜ் வீட்டிலிருந்த தம்பதி இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 505

1

0