‘என்ன விட்ருங்க ப்ளீஸ்..’காதலுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 15 நாட்களில் 5 வன்கொடுமை கொடூரங்கள்…அச்சத்தில் தமிழகம்..!!

Author: Rajesh
29 March 2022, 12:38 pm
Quick Share

கடலூர்: காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மிரட்டி 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களும் அடுத்தடுத்து வெளியாகி பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விருதுநகரில் காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதை நண்பர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் அந்த பெண்ணை சீரழித்த வழக்கு தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 4 பேர் பள்ளி மாணவர்கள் என்பது மேலும் அதிர வைத்தது.

இதையடுத்து, வேலூரில் பெண் மருத்துவர் ஒருவர் , நண்பருடன் நைட் ஷோ பார்த்துவிட்டு திரும்பும்போது, நண்பரை தாக்கிவிட்டு பெண் மருத்துவரை கடத்தி சென்று 5 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கிலும் கைதான 4 பேரில் 3 பேர் மைனர்கள் என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

இதேபோல், சென்னையில் தனியாக வீட்டில் இருந்த சிறுமியை அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது. மேலும், விருதுநகரை சேர்ந்த கல்லூரி மாணவி ராமநாதபுரத்தில் காதலன் கண்முன்னே சமூக விரோத கும்பலால் சீரழிக்கப்பட்ட சம்பவம் மேலும் மேலும் அதிர வைத்து.

இந்நிலையில், கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் காதலனுடக் பேசிக் கொண்டிருந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் காதலன் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செம்மண்டலம் தலைமை தபால் நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்ததில், அந்தப் பெண் கூறிய சம்பவம் போலீசாரையே பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று இரவு கடலூர் அருகே கம்மியம்பேட்டை பகுதியில் தனது காதலனுடன் அந்தப் பெண் பாழடைந்த ஒரு வீட்டில் நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென உள்ளே நுழைந்த மூன்று இளைஞர்கள் அவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் இருவரையும் ஒன்றாக செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, காதலனை கடுமையாக தாக்கி கட்டிப்போட்டுவிட்டனர். பின்னர், எவ்வளவு கதறி கெஞ்சியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக காதலன் முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணின் காதலனை இரண்டு நபர்கள் அடித்து கையை கட்டி பிடித்துக்கொண்ட நிலையில் ஒருவன் இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

தொடர்ந்து மேலும் இருவரும் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் எனவும் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என கூறி அவர்களை அங்கிருந்து மிரட்டி அனுப்பியதாக போலீஸாரிடம் அந்தப்பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இளம்பெண்ணை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலனை வரவழைத்து விசாரித்த போது அவருக்கும் குற்றவாளிகள் குறித்து தெரியவில்லை என கூறியுள்ளான். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

மேலும், 3 வாலிபர்களை போலீசார் பிடித்து வந்து காதலனிடம் காண்பித்தனர். அப்போது காதலியை கற்பழித்த 3 நபர்கள் இவர்கள்தான் என அடையாளம் காண்பித்தார். மேலும் காதலனிடம் இருந்து பறித்த செல்போன் ஒரு நபரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த 3 நபர்களின் செல்போன்களை கைப்பற்றிய போலீசார் ஏதேனும் கற்பழிப்பு வீடியோ அல்லது புகைப்படம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் குப்பன்குளம் பகுதியை சேர்ந்த கிஷோர்(19), சதிஷ் (19), புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞர் என்பது தெரியவந்தது. அந்த மூன்று நபர்கள் ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா என்பதனையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் சினிமா பட பாணியில் காதலன் முன்னிலையில் 3 பேர் கொண்ட கும்பல் காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கம்மியம்பேட்டை சுடுகாடு பகுதியில் ஏற்கனவே திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்ல முடியாத அவல நிலையில் இருந்து வந்தனர். மேலும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அவர்களை விரட்டி அடித்து எச்சரிக்கை செய்து அனுப்புவார்கள்.

ஆனால் தற்போது பெண் ஒருவரை பலவந்தமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும்பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் போலீசார் இரவு நேரங்களில் இப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்தடுத்து தமிழகத்தில் பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Views: - 939

0

0