முன்பை விட கூடுதலாக தேர்வு எழுதும் 2 லட்சம் பேர்.. 79,000 பேர் தமிழில் தேர்வு எழுத விண்ணப்பம் : டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

Author: Babu Lakshmanan
17 May 2022, 4:57 pm
Quick Share

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை வழக்கத்தை விட கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக அதன் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- குரூப் 2 தேர்வை எழுத 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 79,000 தேர்வர்கள் தமிழில் தேர்வெழுத விண்ணப்பம் அளித்துள்ளனர்.

38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. சென்னை மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். 9.10 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 5,000 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 9 மணிக்குப் பிறகு தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு மே 21ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும், எனக் கூறினார்.

Views: - 483

0

0