நடுவரால் கடுப்பான மேத்யூ வேட்… பேட்டால் ஓங்கி அடித்து ஆத்திரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
19 May 2022, 11:02 pm
Quick Share

சென்னை : பெங்களூரூவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் அம்பயரால் கடுப்பான குஜராத் அணியின் வீரர் மேத்யூ வேட் செய்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும், குஜராத் அணியும் விளையாடின. இதில், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூரூ அணி, இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றால் தான் பிளே ஆப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலையில் விளையாடி வருகிறது. இதனால் இந்த போட்டி ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணிக்கு தொடக்க வீரர் கில், மூன்றாவது ஓவரிலேயே ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். பின்பு களமிறங்கிய மேத்யூ வேட், 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை அடித்திருந்தார். மேக்ஸ்வெல் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில், மேத்யூ வேடிற்கு எல்பிடபிள்யூ அப்பீல் கேட்கப்பட்டது. சிறிது நேரம் யோசித்த அம்பயரும் இறுதியில் அவுட் கொடுத்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டு கால் பேடில் பட்டது தெரிய வந்தது. இதனால், உடனடியாக வேட் டி.ஆர்.எஸ். அப்பீல் செய்தார்.

ஆனால், அதில் பந்து பேட்டிற்கு மிக அருகில் திரும்பியது தெரிய வந்தது. இதனால், பேட்டில் பட்டது போல தான் தெரிந்தது. ஆனால், பெரிதாக ஸ்பார்க் காட்டாததால் மூன்றாவது அம்பயரும் அவுட் கொடுத்தார்.

Image

இதனால் கடுப்பான மேத்யூ வேட் டிரெஸ்சிங் ரூமிற்கு சென்று பேட்டினை வேகமாக தரையில் தூக்கி எறிந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அம்பயர் அவுட் கொடுத்ததும், விரக்தி ஆனா மேத்யூ வேடிடம் விராட் கோலி மைதானத்திலேயே தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார். கோலியின் இந்த செயலும் பாராட்டுக்குள்ளானது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் நடுவரின் தவறான முடிவுகள் பல முறை அரங்கேறியுள்ளது.

Views: - 1639

0

0