வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு சித்ரவதை?….சிக்கலில் பிரபல நடிகை: சிறுமிகளிடம் தொடரும் விசாரணை..!!

Author: Rajesh
12 May 2022, 11:45 am
Quick Share

அண்ணாநகர்: நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அண்ணாநகர் எச்.பிளாக் பகுதியில் பிரபல நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் 17 வயது சிறுமி தப்பித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாள்.

அதன்படி, அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், பிரபல நடிகை மும்தாஜ் வீட்டில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வடமாநிலத்தை சேர்ந்த சிறுமி தனது அக்காவான 19 வயது பெண்ணுடன் வேலை செய்து வந்தாள்.

அப்போது, இருவரையும் சித்ரவதை செய்து வந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் மீட்டு சென்னையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று காலை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தை தொழிலாளர் நலவாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், இருவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, பணி செய்த இடத்தில் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல், சித்ரவதை உள்ளிட்டவை நடந்ததா மேலும் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனரா, பணத்திற்காக விற்கப்பட்டனரா என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணை முடிவின் அடிப்படையில், நடிகை மும்தாஜ் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Views: - 499

0

0