விஜய் கேரியரில் மறக்க முடியாத கெட்டப் : பிரபல இயக்குநர் வைத்த ட்விஸ்ட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 1:45 pm
Vijay - Updatenews360
Quick Share

நடிகர் விஜய் இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் காதல் நாயகனான வலம் வந்த விஜய், பின் தனது வயதுக்கேற்ப கதைக்களத்தை மாற்றி நடித்தார்.

ஆக்ஷன் படங்கள் இவருக்கு கைக்கொடுக்க பின்னர் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை வெளியிட்டு வசூல் மன்னனாக வலம் வந்தார். இந்த நிலையில் இவரை வைத்து தொடர்ந்து 3 படங்களை ஹிட் கொடுத்தவர் இயக்குநர் அட்லீ.

Theri- Shooting Spot

ராஜா ராணி மூலம் இயக்குநராக அறிமுகமாக குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சி கொடுத்தவர். தெறி, மெர்சல், பிகில் என அனைத்து படங்களுமே பயங்கர ஹிட்.

Vijay's 'Mersal' wins international award | The News Minute

அந்த படம் இந்த படத்தின் காப்பி என விமர்சனம் வந்தாலும், 3 படங்களுமே வேற லெவல் ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் பிகில் படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் சில காட்சிகள் மட்டும் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

Rayappan HD Snap | Thalapathy Vijay | Flickr

இந்நிலையில் ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் தனியாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருந்தனர்.

தற்போது அதையே அமேசான் பிரைம் வீடியோ தங்களது ட்விட்டர் பக்கத்தில், பிகில் படத்தில் ராயப்பன் வரும் காட்சியை பதிவிட்டு, ராயப்பனின் கதைக்காக மட்டுமே எடுக்கப்பட்ட முழுப் படத்தையும் கற்பனை செய்து பாருங்கள் என குறிப்பிட்டு இருந்தனர். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்த ட்விட்டுகளை கவனித்த அட்லீ, செஞ்சிட்டா போச்சு என ராயப்பன் பேசும் வசனங்களை வைத்து பதிலளித்துள்ளார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் ராயப்பன் கதாபாத்திரத்தை முழுநீள படமாக அட்லி எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Views: - 555

6

2