மறக்க முடியாத நினைவுகள்… தமிழ் சமூகத்தினரை சந்தித்தது பொக்கிஷம் : ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட முதலமைச்சரின் பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 10:00 pm
Sapin CM
Quick Share

மறக்க முடியாத நினைவுகள்… தமிழ் சமூகத்தினரை சந்தித்தது பொக்கிஷம் : ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட முதலமைச்சரின் பதிவு!

கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்றார். முதல்வருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்றார்.

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் ரோகா குழுமத்துடன் ரூ.400 கோடி முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்த்ததாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்,

இந்த நிலையில் ஸ்பெயினில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் தனது பயணத்தை நிறைவு செய்து இந்தியா புறப்பட்டுள்ளார்.

சென்னைக்கு புறப்பட்டு முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளேன். சிறப்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும். மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெயின் நாட்டினரும் அங்குள்ள தமிழர்களும் அளித்தனர். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Views: - 551

0

0