‘வந்துட்டேன்னு சொல்லு…திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’: போக்கு காட்டிய 12 அடி நீள ராஜநாகம்…அலேக்காக தூக்கிய ‘ வா வா சுரேஷ்’..!!

Author: Rajesh
26 March 2022, 4:41 pm
Quick Share

கேரளா: பத்தனம்திட்டா பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வாவா சுரேஷ் அலேக்காக பிடித்து தூக்கி சாக்குப்பையில் போட்டு எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலத்தில் சமூக ஆர்வலரும் பாம்பு பிடி வீரருமான வாவா சுரேஷ் பொது இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து பத்திரமாக வனத்துறை இடம் ஒப்படைப்பது வழக்கம்.

இந்நிலையில் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்றைய தினம் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வாவா சுரேஷ் அலேக்காக தட்டித் தூக்கி சாக்குப்பையில் போட்டு எடுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இதுபோல பொது மக்களை அச்சுறுத்தி வந்த கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்பை பிடிக்கும் போது, இவரை அந்த பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிர் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1059

0

0