போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு அட்டகாசமான ஆஃபர்: Vi நிறுவனம் அறிவிப்பு!!!

Author: Hemalatha Ramkumar
15 June 2022, 4:57 pm
Quick Share

Vi இன்று அதன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு SonyLIV பிரீமியம் ஆட்-ஆன் பேக் ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய போஸ்ட்பெய்டு ஸ்பெஷல் பேக்கானது, SonyLIV பிரீமியத்திற்கு 30 நாள் அணுகலை வழங்குகிறது. 10GB இலவச டேட்டாவுடன் மாதாந்திர சந்தா கட்டணமான ரூ. 100 (வரிகள் உட்பட), பயனரின் போஸ்ட்பெய்டு பில்லில் சேர்க்கப்படும்.

Vi போஸ்ட்பெய்ட் பயனர்கள் இப்போது பிரபலமான திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், லைவ் விளையாட்டுகள் மற்றும் பலவற்றை மொபைல் மற்றும் டிவியில் பார்க்கலாம்.

சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு புதிய வரம்பற்ற திட்டங்களை அறிவிக்கிறது. இது ரூ.599 இல் தொடங்குகிறது.
Vi ஆப்பில் உள்ள Vi Movies & TV (Vi MTV) இன் கீழ் Vi தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒரு நூலகத்தை வழங்குகிறது. ViMTV பயன்பாட்டில் 450+ நேரலை டிவி சேனல்கள், நேரலை செய்தி சேனல்கள் மற்றும் பிற OTT பயன்பாடுகளிலிருந்து பிரீமியம் அணுகல் உள்ளது.

UAE, UK, USA, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிரேசில் போன்ற பிரபலமான இடங்களுக்குச் செல்லும் Vi போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் Vi Unlimited International Roaming பேக்குகளைத் தேர்வு செய்யலாம். இது போன்ற திட்டங்கள் ரூ. 599 முதல் தொடங்கி ரூ.5999 வரை உள்ளது.

Views: - 2787

0

0