ரசிகர்களுக்கு தவறான முன் உதாரணமாக மாறிய விஜய்.? மகனுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர் – புறக்கணித்த விஜய் மீது எழுந்த விமர்சனம்.!

Author: Rajesh
5 July 2022, 4:40 pm
Quick Share

பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.

அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது மனைவி ஷோபாவுடன் சேர்ந்து கேட் வெட்டிய எஸ்ஏசி தனது மனைவிக்கு ஊட்டிவிட்டார். இதில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை. போட்டோக்களில் கூட எஸ்ஏசியும் அவரது அம்மாவும் மட்டுமே இருந்தனர்.

தனது அப்பாவுக்கு நடிகர் விஜய் ஒரு வாழ்த்து கூட கூறியதாக தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேக ஹோமம் நடத்தி வழிபாடு செய்தார். அப்போது அவருடன் மனைவி ஷோபா மட்டுமே உடன் இருந்தார்.

இதில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் அப்பாவின் சதாபிஷேக விழாவில் கூட பங்கேற்கவில்லையா என கேட்டு அதிர்ச்சியடைந்து வருகின்றனர். ஒரே மகனான விஜய் பெற்றோரின் பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்கவில்லை, தற்போது சதாபிஷேக விழாவிலும் பங்கேற்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தலைவனாக இருந்து கொண்டு இப்படி பெற்றோரை தவிக்க விடுவது நியாயமில்லை என்றும், ரசிகர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்கக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். என்னதான் கோபம் இருந்தாலும் இதுபோன்ற விசேஷங்களை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே எஸ்ஏ சந்திரசேகர் தனது மனைவியுடன் சதாபிஷேக விழாவை கொண்டாடிய போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 555

0

0