விஜய் மீது தவறு கிடையாது.. பீஸ்ட் ஓடாததற்கு அவர் மட்டும் தான் காரணம்.. பிரபல தயாரிப்பாளர்..!

Author: Rajesh
24 April 2022, 6:21 pm
Quick Share

விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் தான் பீஸ்ட். டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ் என பலர் நடித்திருந்தனர். படத்தின் டிரைலர் வெளியான போது அது முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்ததால் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப் படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பியிருந்தனர்.

பீஸ்ட் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் ரெஸ்பான்ஸ்.. திரையரங்கு நிர்வாகம்  எடுத்த அதிரடி முடிவு..? – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online ...

ஆனால், வெளியான பிறகு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற ரிசல்ட்டே வெளியானது. படத்தில் விஜய் படத்திற்கு ஏற்றவாறு ஆக்சன் காட்சிகள் குறைவு. மேலும், டாக்டர் பட நிகழ்ச்சி அளவுக்கு காமெடி காட்சிகளும் பெரிதாக இல்லை. என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Vijay in beast movie song – Update News 360 | Tamil News Online | Live News  | Breaking News Online | Latest Update News

இது குறித்து அண்மையில் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே.ராஜன் கூறுகையில், விஜய் இந்த படத்தில் என்ன குறை வைத்தார்? நன்றாக ஆடி உள்ளார். நன்றாக பாடியுள்ளார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முந்தைய படத்தைவிட இதில் குறைவாக நடித்தாரா? இல்லை, முந்தைய படத்தில் எப்படி நடித்தாரோ அதை விட அதிகமாகவே நடித்துள்ளார். அப்படி இருந்தும் படம் ஓடவில்லை என்றால் அது யாருடைய தவறு? நிச்சயம் அது இயக்குனர் நெல்சனின் மீதான தவறுதான். இதில் விஜய் மீது எந்த தவறும் கிடையாது. என்று தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

Views: - 558

6

0