ஜெயில்ல களி திங்க வேண்டிய நிலைமை வந்தற போகுது : சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 3:44 pm
Vijay Tv - Updatenews360
Quick Share

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிர்வாணமாக போஸ் கொடுத்து போடோஷூட் ஒன்றை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த போட்டோஷுட் படு வைரலானது. இதனால் அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. குறிப்பாக அவருக்கு எதிராக மும்பை போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த சர்ச்சை முடிவதற்குள் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் படுக்கையறையில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் இந்த புகைப்படங்களை தனது மனைவி ஜுவாலா கட்டா தான் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இவ்வாறு போஸ் கொடுத்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். இவருக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த லிஸ்டில் இன்னொரு பிரபலமும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு பிரபலம் சரத் தான்.

குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸான சரத், விஷ்ணு விஷாலைப் போல் பெட்ரூமில் படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் முதலில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என நினைத்து விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வந்தனர். பின்னர் தான் அவர் நிர்வாண சேலஞ்சிற்காக இவ்வாறு போட்டோ பதிவிட்டது தெரியவந்தது.

மேலும் சிலர், மனசுல விஷ்ணு விஷால்னு நினைப்போ என சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர். மேலும் இந்த போட்டோவை குக் வித் கோமாளில் பிரபலம் பாலா தான் எடுத்ததாக சரத் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

Views: - 456

0

1