சக்கை போடு போடும் விக்ரம்… இயக்குநர் நெல்சனை வச்சு செய்யும் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
4 June 2022, 10:03 am
Quick Share

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் நெல்சன் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். இந்தப் படத்தில் ஃபஹத் பாசில், ஷிவானி நாராயணன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அரசியலுக்கு சற்று காலம் முழுக்கு போட்டுவிட்டு, முழுக்க முழுக்க திரைப்படங்களில் கவனம் செலுத்துவதாக சொல்லிய பிறகு, கமல் நடித்து வெளியான படம்தான் விக்ரம். எனவே, இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே சென்றது.

நேற்று இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு நேர்மறையான கருத்துக்களே வெளியாகி வருவதால், கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். RRR மற்றும் KGF2 உள்ளிட்ட பான் இந்தியா திரைப்படங்களுக்கு சவால் விடுக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக படத்தை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், விக்ரம் படம் சக்கை போடு போட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் இயக்குநரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநருமான நெல்சன் திலீப் குமார் இப்போது டிரெண்டாகி வருகிறார்.

பீஸ்ட் படத்திற்கு இயக்குநர் நெல்சன் பல்வேறு பில்ட்டப்புகளை கொடுத்து வந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற காட்சிகள் விஜய் ரசிகர்களிடையே கோபத்தையே ஏற்படுத்தியது. மேலும், பீஸ்ட் வசூலில் சாதனை படைத்தாலும், படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கொடுத்தது.

தற்போது, நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த படமான விக்ரமை பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

This image has an empty alt attribute; its file name is image-110.png

இந்த நிலையில், பீஸ்ட் படத்தை சொதப்பிய இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வரும் நிலையில், அடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தையாவது சரியாக எடுக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்களும் மீம்ஸ்களையும், டிரோல்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.

Views: - 664

0

0