எங்கே சென்றது மனிதநேயம்? மனநலம் குன்றிய மூதாட்டியை தரதரவென இழுத்து சென்ற கல்லூரி மாணவர்.. பதற வைக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 10:54 am
Student Beat Mentally Old Lady - Updatenews360
Quick Share

தெலுங்கானா : மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் மூதாட்டியை கல்லூரி மாணவர் ஒருவர் தரதரவென இழுத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாத் நகர் நகராட்சியில் உள்ள வீதி ஒன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி சித்தம்மா யாசகம் எடுத்து வசித்து வருகிறார்.

அவருக்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் மூன்று வேளையும் உணவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய உடலில் ஆங்காங்கே காயங்கள் காணப்பட்டன.

எனவே அந்த பகுதி மக்கள் அந்த மூதாட்டியிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது யாரோ ஒருவன் என்னை தாக்கி காயப்படுத்தி விட்டான் என்று கூறினார்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் வசிக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பர்வேஷ் என்பவன் அந்த மூதாட்டியை தரதரவென்று வீதியில் சென்று தாக்கியது தெரியவந்தது.

இதுபற்றி அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சாத் நகர் போலீசார் கல்லூரி மாணவன் பர்வேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையின் போது அந்த மூதாட்டி என்னை திட்டினார். எனவே அவரை நான் தாக்கினேன் என்று கூறியிருக்கிறான். மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி திட்டியதால் தரதரவென இழுத்து சென்று மாணவன் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 830

0

0