பேசி பழகுவதற்காக செல்போன் எண் கேட்டு ஒரே டார்ச்சர்… இளைஞனை காலணியால் அடித்து துவைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ!

Author: Babu Lakshmanan
23 November 2022, 5:31 pm
Quick Share

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் பெண்ணிடம் செல்போன் எண் கேட்டு தொல்லை கொடுத்த இளைஞனை காலணியால் அடித்து புரட்டியெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் காம ரெட்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அங்கு வந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி எண் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், அந்தப் பெண் கடுப்பாகியுள்ளார். ‘உனக்கு எதற்கு என்னுடைய போன் நம்பர் என கேட்டு, தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினார்.

பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவனை அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Views: - 354

0

0