ஜிம்மில் கடுமையான HARD WORK… வியர்த்து விருத்து விருத்துப் போன இளம்பெண் மருத்துவர் ; சற்று நேரத்தில் நடந்த சோகம்

Author: Babu Lakshmanan
24 November 2023, 10:44 am
Quick Share

சென்னையில் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம்பெண் மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் அன்விதா (24), தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று இரவு 7 மணியளவில் அன்விதா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் திடுக்கிட்டு போகினர். அப்போது, அதே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், முதலுதவி கொடுத்து, அன்விதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அன்விதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்த இளம்பெண் மருத்துவரின் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், இறுதிச் சடங்கு செய்து உடலை நல்லடக்கம் செய்துள்ளனர். இதனிடையே, உடற்பயிற்சி கூடத்தில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றி கீழ்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 206

0

0