இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் உயிரை விட்ட 2K கிட்ஸ்…ரயில் மோதி பீஸ் பீஸாய் சிதறிய இளைஞர்கள்: தண்டவாளத்தில் எடுத்த செல்பியால் விபரீதம்…!!

Author: Rajesh
8 April 2022, 4:28 pm
Quick Share

செங்கல்பட்டு: ரயில் தண்டவாளத்தில் நின்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் ரயில் உடல்சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பாரதியார் தெருவில் வசிக்கும் அசோக்(24), மோகன்(17) பிரகாஷ்(17) மூன்று பேரும் நண்பர்கள்.

சுகுமார் என்பவருடைய மகன் அசோக்(24), குமார் என்பவருடைய மகன் மோகன்(17) ராமு என்பவருடைய மகன் பிரகாஷ்(17) இந்த மூன்று நண்பர்களும் ஒன்றாக இணைந்து வீடியோக்களை எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில், நண்பர்கள் மூவரும் வழக்கம்போலவே நேற்று மாலை தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்துள்ளனர்.

மேலும், வழக்கம்போல அங்கு நடப்பவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்கா வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த நேரத்தில், சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது அவர்கள், ரயில்வே இருப்புப் பாதையில் நின்று செல்போனில் வீடியோக்களை பதிவு செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதிய விபத்தில் பிரகாஷ் (17), மோகன் (17), அசோக்குமார் (24) ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் தினந்தோறும் ஒன்றாக கூடி இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் வீடியோக்களை பதிவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்பி எடுத்துக் கொண்டு இருந்த போது விபத்து ஏற்பட்டதா, அல்லது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கே கைப்பற்றப்பட்ட செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒன்றாக சுற்றித்திரிந்த இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 672

0

0