அறுவை சிகிச்சை புண்களைக் கூட ஆற்றும் தன்மை கொண்ட அன்னாசிப்பழம்!!!

Author: Hemalatha Ramkumar
15 June 2023, 6:46 pm
Quick Share

அன்னாசி பழத்தில் ஃபோலேட், நியாசின், நார்ச்சத்து, தாமிரம், வைட்டமின் பி6, பாந்தோதெனிக் அமிலம், நார்ச்சத்து, வைட்டமின் பி6 வைட்டமின் சி, இரும்புச்சத்து ஆகியவை காணப்படுகிறது. ஆனால் இந்த நன்மைகள் அனைத்தையும் பெறுவதற்கு அன்னாசி பழத்தை சாப்பிடுவதற்கென்று ஒரு நேரம் உள்ளது. அன்னாசி பழத்தில் காணப்படும் புரோமலைன் நமது உடலில் உள்ள புரோட்டீனை செரிமானம் செய்ய உதவுகிறது.

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி இருக்கும் காரணத்தினால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் தங்களது புண்கள் விரைவில் ஆற வேண்டும் என்ற எண்ணினால் அன்னாசி பழத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பது உதவக்கூடும்.

அன்னாசி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. அன்னாசி பழத்தில் காணப்படும் ஏராளமான ஆன்டி-ஆக்சிடன்டுகள் நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

இந்த நன்மைகள் அனைத்தையும் பெற அன்னாசி பழத்தை காலை அல்லது மாலை நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயிறு பாதி அளவு காலியாக இருக்கும் பொழுது அன்னாசி பழம் சாப்பிடுவது நன்மை தரும்.

அன்னாசி பழம் ஏராளமான நன்மைகளை வழங்கும் போதிலும் அதனை சாப்பிடுவதால் ஒரு சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் தங்களது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க அன்னாசி பழத்தை மிதமான அளவில் சாப்பிட வேண்டும்.

மேலும் அன்னாசி பழம் சாப்பிட்ட உடன் நாக்கில் எரிச்சல், குமட்டல், அரிப்பு அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுமாயின் அன்னாசி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் அன்னாசி பழத்தை தவிர்ப்பது நல்லது. அன்னாசி பழம் உடல் சூட்டை அதிகரிக்க கூடும் என்பதால் அதனால் கரு கலைந்து விட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் கீழ்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்களும் அன்னாசி பழத்தை தவிர்க்க வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 379

0

0