சைவ உணவில் புரோட்டீன் குறைபாடு வராமல் பார்த்து கொள்வது எப்படி???

Author: Hemalatha Ramkumar
15 June 2023, 1:10 pm
Quick Share

சைவ உணவு உண்பவர்கள் அடிக்கடி புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதாக கூறுவதுண்டு. ஆனால் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலே இந்த குறைபாட்டை நாம் தவிர்க்கலாம். அந்த வகையில் சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் புரோட்டீனை சேர்த்துக் கொள்வதற்கான ஒரு சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

பருப்பு வகைகள், கொண்டை கடலை, கருப்பு பீன்ஸ் மற்றும் சோயாபீன்ஸ் போன்றவை புரோட்டீனின் சிறந்த ஆதாரங்கள். இவற்றை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். குழம்பு, சாலட், சூப் போன்ற உணவுகளில் இவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

கினோவா பிரவுன் ரைஸ் போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்துடன் புரோட்டீனும் அதிக அளவில் காணப்படுகிறது இவற்றை தினமும் சாப்பிடுவது உங்களது புரோட்டின் தேவையை பூர்த்தி செய்ய உதவும்

தயிர், காட்டேஜ் சீஸ் அல்லது வே புரோட்டீன் பவுடர் போன்றவற்றை கூட நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது பி புரோட்டீன் மில்க் போன்றவற்றையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

பாதாம் பருப்பு, வால்நட், சியா விதைகள், பூசணி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் ஏராளமான புரோட்டீன்கள் காணப்படுகிறது. சாலட், தயிர் மற்றும் ஸ்மூத்தி போன்றவற்றை சாப்பிடும் பொழுது இந்த நட்ஸ் வகைகளையும் சேர்த்து சாப்பிடுங்கள்.

ஒரு சில காய்கறிகளிலும் புரதச்சத்து காணப்படுகிறது. ப்ரோக்கோலி, கீரை, முளைகட்டிய பயிர்கள், பச்சை பட்டாணி போன்றவற்றில் புரோட்டீன் நிறைந்துள்ளது.

எந்த ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. தினமும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கிய பேலன்ஸ்டு ஆன டயட்டை பின்பற்றுவது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 207

0

0