80% டயட், 20% உடற்பயிற்சி: இது வெறும் கட்டுக் கதையா?

Author: Hemalatha Ramkumar
28 April 2023, 1:40 pm
Quick Share

ஆரோக்கியம் என்பது பணக்காரன் ஏழை என்று அனைவருக்கும் முக்கியமான ஒன்று. இதுவும் விலைக் கொடுத்து நம்மால் வாங்க முடியாத ஒன்று என்றும் சொல்லலாம். அந்த வகையில், தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நம்மால் பலரும் பல வழிமுறைகளை கையாளுகிறோம். ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாகவும், குண்டாக இருப்பவர் ஒல்லியாகவும் முயற்சி செய்வது உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பொதுவாக நம்பும் கட்டுக்கதைகளில் ஒன்று 80% டயட், 20% உடற்பயிற்சி ஆகும்.

உணவு, உடற்பயிற்சி ஆகிய இரண்டுமே நம் ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால், 80% டயட், 20% உடற்பயிற்சி என்ற ஃபார்முலா சரி தானா என்றால் இல்லை என்பதுவே பதில். 100% டயட் 100% உடற்பயிற்சி என்பது தான் சரி. ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. அது போல, எந்த வித செயல்பாடும் இல்லாமல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும் முழு பயனளிக்காது. அதனால், இரண்டிலும் 100% என்பது தான் சரியானதாக இருக்கும்.

எனவே, உடற்பயிற்சி செய்ய நீங்கள் ஜிம்மிற்குச் செல்லலாம். அல்லது நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் போன்றவற்றை செய்யலாம். இது உங்கள் உடலை உடல் ரீதியாக வலிமையாக்கவும், மேலும் நெகிழ்வாகவும், வைத்துக் கொள்ள உதவும். அதே நேரத்தில், உங்கள் உடலின் செயல்பாடுகளை பராமரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கவே நீங்கள் சாப்பிடுகிறீர்கள். அதே சமயம், உடற்பயிற்சி உங்களை வலுவாக்கும். ஆகையால், இரண்டிற்கும் 100 சதவீதம் கொடுப்பது தான் சரியாக இருக்கும்.

அதோடு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் உடல் மற்றும் உள் நலனுக்காக நேரத்தை ஒதுக்குவதை உறுதிசெய்வதாலே போதும், உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை கவனித்து நலமுடன் இருங்கள்!

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 239

0

0